பெண்களுடன் ஆபாச வீடியோ: தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது.

நாகர்கோவில், குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின.

தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் புகார் அளித்தார்.

புகாரையடுத்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை போலீசார் இன்று கைது செய்தனர். நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம்: குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின. பாலியல் தொல்லை தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ நெருக்கமாக இருந்துள்ளார். அதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் ஆபாச லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாது அவரது லேப்டாப் மற்றும் செல்போனை சிலர் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் தான் செல்போனில் இருந்த பாதிரியாரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

நர்சிங் மாணவி புகார் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ வாட்ஸ்-அப் மூலம் பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2 தனிப்படை அமைப்பு இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.