திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் வழங்கிய ஆலோசனை !

சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குதல், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். எதிர்க்கட்சிகள் என்றால் அவையில் விமர்சிக்கத் தான் செய்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வாறு விமர்சிக்கும் போது திமுக உறுப்பினர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், மூத்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன பேச வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக பேச வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.