கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவு.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் அவரது பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன அதனை வழிமொழிந்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீ. இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியுள்ளதால் தனக்கு இத்துறை தொடர்பில் புரிதல் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அதனால் இந்தக் குழு ஊடாக மேற்கொள்ள முடியுமான உயர்ந்த சேவையை மேற்கொள்ளத் தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேபோன்று, இந்தக் குழு பரந்துபட்ட ஒரு துறையை கொண்டுள்ளதால் உயர்கல்வி மற்றும் ஆய்வு பற்றிய உப குழு மற்றும் திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பற்றிய உப குழு ஆகிய இரண்டு உப குழுக்களை நியமிக்க இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விமலவீர திசாநாயக்க, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ முதிதா பிரசாந்தி சொய்சா, கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்கவும் இதன்போது கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.