சொன்னபடி கேளு சொல்லுறது பாஸ் – பிக் பாஸ் 4

விஜய் டிவியில் கடந்த் மூன்று வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருவது நாம் அறிந்த ஒன்றே.

அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் திரு.கமல்ஹாசன் என்பதும் நமக்கு தெரிந்த ஒன்றே. கடந்த மாத இறுதியில் “வேலையை ஆரம்பிப்போமா”என்று கமல்ஹாசன் கேட்பது போல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வீடியோ ஒன்றை வெளிவிட்டது விஜய் டிவி.

அந்நிகழ்ச்சிக்காக மீண்டும் நேற்று ஒரு வீடியோவினை வெளியிட்டது விஜய் டி,வி.

சொன்னபடி கேளு,சொல்றது பாஸ் என்று அழகான சிறு நடன அசைவுடன் ஆரம்பிக்கின்றார் திரு.கமல்ஹாசன்.

அப்பாடல்  சிங்காரவேலன் என்ற திரைப்படத்தில் அவர் பாடிய  ”சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே” என்ற பாடலின் வேறு வடிவம் ஆகும்.

கொரானா விழிப்புணர்வுடன் ஒரு வீட்டின் உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கும் அந்த வீடியோ முடியும் போது பிக்பாஸ் மேடையில் முடிகின்றது..

அப்படி வீடியோ முடிவடையும் தறுவாயில்..”தப்புன்னா தட்டி கேட்பேன்நல்லதுனா தட்டிக்கொடுப்பேன்” என்ற பஞ்ச் டயலாக்கும் இடம் பெற்று உள்ளது. 

தற்பொழுது உள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் பிரமோஷன் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..

Leave A Reply

Your email address will not be published.