திருப்பூர்-கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கட்சியினருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்கும் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தலின் பேரில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 26-ந்தேதி அன்று வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கூட்டங்கள் நடை பெற்றன. அடுத்த கட்டமாக பூத் கமிட்டிகளை வலுவாக்குவது, புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்சேர்க்கை தொடர்பான கலந்தா லோசனைக் கூட்டங்கள் நாளை (4-ந்தேதி) திருப்பூரிலும், 5-ந்தேதி கோவையிலும் நடைபெற உள்ளன. திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளுக்கு 2 நாட்களும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த பாராளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள துணை மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பொருளாளர், நகர செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்டமைப்பில் உள்ள நிர்வாகிகளுடன் மட்டும் இக்கூட்டங்களில் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.