முதல் டி20 போட்டி – நியூசிலாந்தை சுருட்டியது பாகிஸ்தான்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிரடியாக ஆடிய சயிம் அயூப் 28 பந்தில் 47 ரன்னும், பகர் சமான் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஹீம் அஷ்ரப் 22 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், மில்னே, பென் லிஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி நியூசிலாந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 34 ரன்களும், டாம் லாதம் 20 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நியூசிலாந்து 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹரிஸ் ராபுக்கு அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.