இந்தியாவில் மீண்டும் 10,000ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,542 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு கணிசமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து 63,562 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் தொற்றில் இருந்து 8,175 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகப் பதிவாகியுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து இருந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தொற்றில் இருந்து 2062 குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக டெல்லியில் 738 பேர், ராஜஸ்தானில் 310 பேர், உத்திர பிரதேசத்தில் 315 பேர், சத்தீஸ்கரில் 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியில் பின் தொடர்வது போன்றவற்றைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.