கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது CSK…

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களத்தில் இறங்கினர்.

இருவரும் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இதையடுத்து டெவோன் கான்வேயுடன் இணைந்த அஜிங்யா ரஹானேவும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

40 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்துவந்த ஷிவம் துபே 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் அதிரடியா 21 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். 29 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 71 ரன்கள் குவித்தார்.

இதைடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க விரர்கள் ஜெகதீசன் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

இதனால் அணி 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னிலும், கேப்டன் நிதிஷ் ராணா 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 26 பந்தில் 5 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்களை எடுத்தார். ரின்கு சிங் 33 பந்தில் 53 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.