சாப்மேன் அதிரடி சதம் – 5வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி.

ராவல்பிண்டி: நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தானும், 3வது போட்டி முடிவில்லாமலும், 4வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 98 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இப்திகார் அகமது 36 ரன்னும், இமாத் வாசிம் 31 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் டிக்னர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து திணறியது.

அடுத்து இறங்கிய சாப்மேன் அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நீஷம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-2 என சமன் செய்தது நியூசிலாந்து அணி. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சாப்மேனுக்கு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.