கிழக்கு மாகாண ஆளுநராகின்றார் செந்தில்! – மத்திய மாகாணம் நவீனிடம்…

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்போதைய ஆளுநர் பதவி வகிப்பவர்கள் அப்பதவியில் நீடிப்பார்கள் எனவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.