அயர்லாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை.

இலங்கை- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 492 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார்.

பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது .அதில் அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . பால் ஸ்டிர்லிங் 1 ரன்கள் லோர்கன் டக்கர் 13 ரன்கள் , கர்டிஸ் கேம்பர் 12ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் பால்பிர்னி ,ஹாரி டெக்டர் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர் சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டர் அரைசதம் அடித்து 85 ரன்களில் வெளியேறினார். பின்னர் பால்பிர்னி 46 ரன்களில் வெளியேறினர்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 77.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு அயர்லாந்து அணி ஆட்டமிழந்தது. இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகள் , அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.