ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவானது.

120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.