சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா.

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை சுமார் 4 கோடி பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு அதிகபட்சம் 6.5 கோடி பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கொவிட் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் ஏற்படும் மிகப்பெரும் கொரோனா அலை இது ஆகும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இதன் மூலம் அந்நாட்டு சுகாதார துறை ஸ்தம்பித்தது. புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதிவேகமாக பரவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் திறன் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலம் XBB திரிபை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

புதிய திரிபு வேகமாக செயல்பட்டு ஒருவருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கொரோனா தொற்றின் புதிய திரிபு தேசத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள சீனா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.