அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்..!

அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு முறையாக அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், வரவு – செலவு கணக்குகளை முறையாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ள 36 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்தும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமலாக்கத் துறை முடக்கியுள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான ஆவணங்களைக் கொடுத்து சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துளார்.

Leave A Reply

Your email address will not be published.