பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் நோய்த் தொற்று மீளவும் பரவலாம்

பொதுக்கூட்டங்களை நடத்தினால் கொரோனா மீண்டும் வரலாம். இது தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், பொதுக் கூட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் சிலர் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வாறான பொதுக் கூட்டங்களை நடத்துவதன் மூலம் சமூகத்துக்குள் கொரோனா பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தாலும் அது மற்றையவர்களுக்கும் பரவக் கூடும்.

எனவே இவ்வாறு கூட்டங்களை நடத்துவது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் செயலாகும். இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.