வழிபாட்டுத்தளங்களை மீள திறப்பதற்கு இன்று முதல் அனுமதி

சுகாதார நலனை கருத்திற்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து அனைத்து வழிபாட்டுத்தளங்களிலும் அனுமதிக்கக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவரும் புரிந்து கொண்டு செயல்படுமுகமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மக்கள் குழுமையாக பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பணிகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.

மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக வழமைக்கு திரும்புகின்ற நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Comments are closed.