தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் – உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு.

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் – உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சுடரேற்றி பொன்.சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தியாகி பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்து ஆவார். அவர் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் – உரும்பிராயில் பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது, பொலிஸாரிடம் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காகச் சயனைட் அருந்தி தனது உயிரை ஆகுதியாக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.