“சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தத் திட்டம்…” – அமைச்சர் அன்பில் மகேஸ்

சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை நாட்களாக செயல்பட திட்டமிட்டுள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை செயின்ட் தாமஸ் மௌண்டில் உள்ள மான் ஃபோர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் தகரி சிலம்பாட்ட கழகம் நடத்தும் 2ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்ப போட்டியினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, சிலம்பாட்டம் என்பது தமிழ் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு நாம் அறிந்த ஒன்று தான். மேலும் இது போன்ற போட்டிகள் அழிந்து விடாமல் இருப்பதற்கு இந்த அமைப்புகள் நடத்துவதற்கு நன்றி என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் தான் பணியமர்த்தப்படுகிறார்கள் மேலும் பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு பாதிப்பு ஏற்படாதா செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை ஏற்படாத வகையிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை நாட்களாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.