வெளிநாடுகளில் தத்தளிப்போரை தாய் நாட்டுக்கு கொண்டு வாருங்கள் : மனோ

சவுதி அராபியா, கட்டார், UAE, லெபனான், குவைத், ஓமான், ஜோர்தான், கொரியா, மாலைதீவு… ஆகிய நாடுகளில் தொழில் புரிந்து இன்று திக்கற்று நிற்கும் இலங்கையர் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களது துயரத்தை துடைக்குமாறு மனோ கணேசன் பா.உ அவர்கள் அரசை கேட்டுக் கொண்டார்.

இம்தியாஸ் பாக்கீர் எம்பி முன்மொழிய, மனோ கணேசன் எம்பி வழிமொழிய விவாதிக்கப்பட்ட இந்த விவகாரம் தொடர்பில், முன்னுரிமை அடிப்படையில் செயற்பட்டு, இம்மக்களை இயன்ற விரைவில் தாய்நாட்டுக்கு கொண்டு வரும்படி விவகார அமைச்சர் நிமல் சிறிபால சில்வா வலியுறுத்தப்பட்டார்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்று தந்த மக்கள் சொல்லோண்ணா துயரத்தோடு பல உபாதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டு வாழ்வா சாவா என போராடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து ஒரு இலங்கையர் எழுதிய கடிதம் ஒன்றின் சிங்கள மொழி பெயர்ப்பு பகுதியொன்றை இம்தியாஸ் பாக்கீர் எம்பி அவர்கள் நாடாளுமன்றத்தில் படித்த போது வேதனை தரும் ஒரு செய்தியாக இருந்தது. தான் இறந்து போனாலும் தன்னைப் போல துன்புறும் பலரை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும். தான் பிறந்த தாய் நாட்டை தான் இன்னும் நேசிக்கிறேன் என அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.