விஜய் கல்வி விருது விழா! செலவிடப்பட்ட தொகை எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக ரூ 2 கோடி வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் 234 தொகுதிகளில் இருந்தும் 1500 மாணவ- மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார் நடிகர் விஜய்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக விஜய்யின் பேச்சும் இருந்தது, இந்நிலையில் வெளியூரில் இருந்து மாணவர்கள்- பெற்றோர்கள் வந்து செல்வதற்கான செலவு, காலை மற்றும் மதிய உணவு, மண்டபம் என மொத்தமாக 2 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளாராம் நடிகர் விஜய்.

இந்நிகழ்ச்சியின் போது கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என விஜய் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.