ஒருநாள் உலகக்கோப்பை- நேபாளத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் – மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார். இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் கவுஷல் பூர்டல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி சேர்ந்தனர். இதில், கவுஷல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிம் ஷார்க்கி ஆசிப்புடன் ஜோடி சேர்ந்தார். பிம் ஷார்க்கி இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஆசிப்- ரோகித் பவுதல் விளையாடினர். இதில், ஆசிப் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து விளையாடிய வீரர்களில், ரோகித் 30 ரன்களும், கவுஷல் மல்லா 2 ரன்களும், தீப்பேந்திர சிங் 23 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும், சந்தீப் ஒரு ரன்னும் எடுத்தனர். ஆரிப் ஷேக் அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், கரண் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியாக களத்தில் இருந்த லலித் ராஜ்பான்ஷி பூஜ்ஜியம் ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.