சொய்யாசபுரவில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சொய்யாசபுர லக்மதுர ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான சந்தேகநபர் ஒருவர் மாலபேயில் டி -56 துப்பாக்கி, இரண்டு மெகசின் மற்றும் 25 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பெலியகண்த கலேவெல வாசி என்பதோடு சுவாரபொல பிலியன்தளை வீடொன்றை வாடைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

பல குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற எல்லாவலகே தர்மசிறி பெரேரா என்ற ‘தர்மே’ என்பவரால் இந்த ஆயுதம் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதை தான் வசிக்கும் வாடகை வீட்டின் பின்புறம் ஒளித்த்து வைத்திருப்பதாகவும் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தேடலின் போது, எண்கள் அழிக்கப்பட்ட T 56 துப்பாக்கி, மெகசின் மற்றும் வெடிமருந்துகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

வெளிநாடு சென்ற ஒரு நபரின் ஆலோசனையின் பேரில், வாடகை வாகனங்களில் சென்று, அவர் தெரிவிக்கும் இடங்களில் மக்களிடமிருந்து பணம் சேகரித்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பீடு செய்துள்ளார். மேலதிக விசாரணையில் 400 லட்சம் அளவு பணத்தை இந்த நபர் வைப்பீடு செய்துள்ளது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபரை இன்று (12) கல்கீசை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த பட உள்ளனர்.

Comments are closed.