யாழ் மாவட்ட புத்திஜீவிகளை மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களை சந்தித்தார்.

இன்று (01.07.2023) மதியம் யாழ்ப்பாணம் பிள்ளையார் விருந்தினர் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

எமது மக்களது நீண்டகால பிரச்சனைகளான இனப்பிரச்சனை‌க்கான தீர்வுகள், அரசியல் உரிமைகள், அபிவிருத்திகள், வடக்குக்கான முதலீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கௌரவ. சஜின் டி வாஸ் குணவர்தன அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே அவர்கள்,முன்னாள் பிரதி நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சாரதி துஷ்மந்த மித்ரபால அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் திரு. தஹாம் சிறிசேன அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பேராசிரியர்கள், மருத்துவ பீடத்தினரும், யாழ் மாவட்ட மருத்துவர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், வணிக சங்கத்தினர், சுற்றுலாத்துறையினர் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.