ஐபிஎல்-லை புறக்கணித்த பங்களாதேஷ் வீரர்களுக்கு இழப்பீடு!

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தது.

அதேசமயம் சில வீரர்கள் காயம் காரணமாக, சில வீரர்களும் சொந்த காரணங்களுக்காக விலகினர். அதில் பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.

அதன்படி ஷாகிப் அல் ஹாசன் கேகேஆர் அணிக்காக 2023இல் ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். அதேபோல லிட்டன் தாஸும் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தமானார். அயர்லாந்துக்கு எதிரான பங்களாதேஷ் போட்டி இருந்ததால் ஒரேயொரு போட்டியுடன் நாட்டிற்கு திரும்பினார்.

டஸ்கின் அஹமது ஐபிஎல் எலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் மாற்று வீரராக அவரை ஐபிஎல் அணிகள் அனுகியதாக பிசிபி தெரிவித்துள்ளது. பங்களாதேஷை சேர்ந்த முஷ்தபிசூர் ரஹ்மான் மட்டுமே டெல்லி அணிக்காக 2 போட்டிகள் விளையாடினார்.

இந்நிலையில் 2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க பங்களாதேஷ் வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டொலர் இழப்பீடு கொடுக்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்புபடி ரூ.53 லட்சமாகும்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜலால் யூனுஸ், “பங்களாதேஷ் வீரர்கள் இழப்பீடு கேட்கவில்லை. ஆனால் எங்களால் முடிந்த சிறிய உதவியாக இதை செய்தோம்.

நாட்டின் அணிக்காக விளையாடுவது என்பது நிபந்தனைகளற்ற ஒன்றாகவே பார்க்கிறோம். இருப்பினும் எங்களது வாரியம் அந்தந்த நேரத்துக்கு ஏற்றது போல வீரர்களின் நலமும் எங்களுக்கு முக்கியமானதாக இருப்பதால் அப்படி செய்தோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.