ஐஸ்வர்யா ராஜேஷை படத்தில் இருந்து நீக்கிய கவுதம் மேனன்.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இவர் இல்லாமல் கதையில் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.