வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை – சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்.

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடியது. 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தயப் தாஹிர் பவுண்டரி , சிக்சருக்கு விரட்டி சதமடித்து அசத்தினார். சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் அரை சதமடித்தனர். இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். யாஷ் துல் 39 ரன்கள், சாய் சுதர்சன் 29 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில் இந்திய அணி 40 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.