ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவோம் : சர்வகட்சி மாநாட்டையடுத்து மனோ கணேசன்

13ம் திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, SLPP பொது செயலாளர் சாகல காரியவாசம், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

SJB, TNA ஆகிய கட்சிகள் தேர்தல் நடத்தும்படி கோரினர்.

இந்நிலையில் “13ஐ முழுமையாக வைத்து தேர்தல் நடத்தினால், தெற்கின் ஏழு மாகாணங்களிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை ரணில் வழங்கி விட்டார் என்பதையே அடிப்படையாக கொண்டு தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் நடக்கும். ஆகவே தேர்தலை நடத்த முடியாது” என ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக கூறி விட்டார்.

ஆகவே, எக்காரணம் கொண்டும், ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என்பது தெளிவாகிறது.

இதுதான் அரசியல் யதார்த்தம். ஆகவே தமுகூ சார்பாக நான், இன்று கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஸ்ரீலமுகா சார்பாக ரவுப் ஹக்கீமும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆகவே நாம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவோம். புதிய ஜனாதிபதி, அதையடுத்து புதிய பாராளுமன்றம், என்ற நிலைமாறல்களுக்கு பிறகுதான் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும்.

Leave A Reply

Your email address will not be published.