கழிவறையில் சக மாணவியை வீடியோ எடுத்த 3 மாணவிகள்… அதிர்ச்சி சம்பவம்..!

கல்லூரி கழிவறையில் சக மாணவியை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் அதே கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 3 மாணவிகள் சேர்ந்து அதே கல்லூரியில் படிக்கும் மாணவி கழிப்பறையில் இருக்கும் போது செல்போன் மூலம் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் வாட்ஸாப் குழுவிற்கு அனுப்பிவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்தது, மேலும் மாணவியை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ இணையதளத்தில் கசிந்ததாக கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில், உடுப்பி மல்பே போலீசார் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை குறித்து வழக்கு பதிவு செய்தனர், மேலும் குற்றத்தில் ஈடுபட்ட 3 மாணவிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கல்லூரிக்கு நேரில் சென்ற மகளிர் ஆணையத் தலைவர் குஷ்பு, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளே சக மாணவியை ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.