ஒபரேஷன் பூமாலை மற்றும் நவ-பொருளாதார காலனித்துவம் – (இன்றைய அரசியல்)

பூமாலை நடவடிக்கை மூலம் வடக்கிற்கு விமானங்கள் மூலம் வான் வழியாக உணவுகளை போட்டு இலங்கையை அச்த்துக்கு உள்ளாக்கி , கட்டாயப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நேற்றைக்கு (29.07.1987) 36 வருடங்கள் ஆகின்றன.

ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜெயவர்தன , 1918ல் லெனின் செய்ததை   போன்று 1987ல் நான் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினேன் என ஜனாதிபதி ஜெயவர்தன , மகாவலி விவசாயிகளைத் தெரிவு செய்யும் விழாவில் தெரிவித்தார்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக ஏற்பட்ட கசப்பினால் , இந்திய RAW அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் இருந்த அனைத்து தமிழ்  குழுக்களுக்கும் இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்தது. அதன் மூலம், 1984 வாக்கில், அந்த குழுக்களை  சக்திவாய்ந்த இயக்கங்களாக மாற்றியது.

இந்தியாவின் அழுத்தத்தினால், ஜனாதிபதி ஜெயவர்த்தன, அவரது சகோதரரான, ஜனாதிபதியின் வழக்கறிஞர் ஹெச். டபிள்யூ.ஜெயவர்த்தன தலைமையில் ஒரு குழுவை அனுப்பினாலும், தமிழ் அமைப்புகள் , அங்கே முன்வைக்கப்பட்ட திம்பு கொள்கைகளை ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அந்த காலகட்டத்தில் போர்நிறுத்தத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொண்ட  தமிழ் போராளி அமைப்புகள், அரசாங்க இராணுவம் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் வலுவாக பலமாகி வளர்ந்தன. இந்தப் பின்னணியில்தான் வடமராட்சி நடவடிக்கை ஆரம்பமாகியது.

இந்திய அமைதி காக்கும் படை, ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் இணைந்து தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கிய போது ,  வடக்கின் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாளை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இருந்ததால் , புலிகள் அமைப்புக்கு அவரால் ஆயுதங்களை வழங்க வேண்டியிருந்தது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி ரணில் சர்வகட்சி மாநாடு நடத்த நினைவு கூர்ந்தார், தமிழ் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலும் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவுக்கோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளுக்கோ உண்மையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் லட்சியம் உள்ளதா என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது.

கலந்துரையாடலில் சஜித் – சுமந்திரன்!

சர்வ கட்சி மாநாட்டுக்கு முன், சஜித் முதலில் செய்த காரியம், தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதி சுமந்திரனுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுதான். ஜனாதிபதி ‘ஏமாற்ற பார்க்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் கைகளை கழுவும் விவகாரம் என சஜித் தெரிவித்துள்ளார். ஆனால் சுமந்திரன் மாநாட்டைப் புறக்கணிக்கக் கூடாது என்ற கருத்தையே கொண்டிருந்தார். எனவே மாநாட்டில் பங்குபற்றினாலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இந்தக் கலந்துரையாடலின் முடிவில், மாநாட்டில் கலந்துகொண்டு அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியிடம் செல்வாக்கு செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவே அன்று சர்வ கட்சி மாநாட்டில் திசை திரும்பும் குழப்பத்துக்கு காரணமானது. அது ஜனாதிபதி ரணிலுக்கு எதிர்பாராத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையானது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புவிசார் அரசியலில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை காட்டுகிறது. சீன மாகாணத்துடன் நட்புறவு உடன்படிக்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா கைச்சாத்திடப்பட்டமையே அந்தப் பதவியை அவர் கிட்டத்தட்ட இழந்ததற்குக் காரணமாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக மாவட்டம் பல வலயங்களாகப் பிரிக்கப்படும் என்றும் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்தார். துறைமுகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்துறை ஆகியவற்றை வளர்ச்சியடைய வைக்கும் ஒப்பந்தங்களை இந்தியாவுடன் இலங்கை செயல்படுத்தவுள்ளது.

திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகளுக்கு 2003ஆம் ஆண்டு முதல் இருந்த உடன்படிக்கைக்குப் பதிலாக, கடந்த ஆண்டு அமைச்சர் உதய கம்மன்பிலவினால் மிகவும் சக்திவாய்ந்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டது.

அதேநேரம், கிழக்கு மாகாணத் தலைவர் செந்தில் தொண்டமானின் செய்தியுடன், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்கள் சந்தித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பெட்ரோலியக் குழாய் இணைப்பு குறித்து விவாதமும் இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்கள் இந்திய விஜயத்தின் போது தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்ததுடன், கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்திற்கு ( Colombo port western container terminal-wtc ) மேலதிகமாக மன்னார் மற்றும் மூதூர் பிரதேசங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் ஏகபோக உரிமையை அவர் பெற்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், சுற்றுச்சூழல் காரணங்களைக் காட்டிலும் இந்து வாதங்களை முன்வைத்து செயல்படுத்தப்படாது என்று மார்ச் 2021 இல் பாஜக அரசு அறிவித்தது.

மகாபாரதத்தின் படி, ராமபிரானின் வானர சேனாவால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கட்டுமானம் பாஜகவின் வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும். இப்போதும் பாரதிய ஜனதாவின் முதுகெலும்பான ஆர்.எஸ்.எஸ் (Rashtriya Swaymsevak Sangh ) கொழும்பில் அலுவலகம் அமைத்து மலையகத்திலும்,  வடக்கிலும் தமது செயல் திட்டங்களில் இறங்கியுள்ளது.

இந்திய ரூபாயில் பொருட்களை இறக்குமதி செய்வது தவிர, சுற்றுலாவுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது.

திருகோணமலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் தலையிட இடமில்லை என்பதை இப்பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் இருந்து தெரிகிறது.

இது புதிய பொருளாதார காலனித்துவம். இது சம்பந்தமாக, எதிர்க்கட்சிகளைத் தவிர, இந்திய விஸ்தரிப்புவாதம் , அரசியல் வர்க்கங்களையும் ஒன்றிணைத்துள்ளது, மேலும் இது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனாவும் அமைதியாகவே உள்ளது.

வழக்கறிஞர் ரசங்க ஹரிச்சந்திர / ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.