பெரும் போகத்தில் உரம் இலவசம்.

அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பண்டி உரம் (MOP) பரிந்துரைக்கப்படும் தொகை முழுவதும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, மற்றொரு ரக உரத்தின் விலையை குறைக்கவும், உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகி, உரத்தினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிடுள்ளார்.

நாட்டில் தற்போது 1.2 மில்லியன் நெல் விவசாயிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.