காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்ட முக்கிய பொலிஸ் அதிகாரி: சட்ட நடவடிக்கை சாத்திமா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச கடந்த 01ம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய அசோக ஆரியவன்ச தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, குறித்த அதிகாரிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். அவர் பல சந்தர்ப்பங்களில் தனது அதிகார வரம்பை மீறி பல்வேறு சந்தேக நபர்கள் குறித்து பொலிஸ் நிலையங்களில் விசாரித்து அழுத்தம் கொடுத்ததாகவும், அந்த சம்பவங்கள் பொலிஸ் பதிவேடுகளில் எழுதப்பட்டுள்ளதாகவும், பொலிஸுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தால், இந்த அனைத்து விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸ் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பு:
தமது விஐபியின் தொலைபேசியை கையில் வைத்திருக்கும் அனைத்து தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, விஐபி தொலைபேசி அழைப்பு எடுக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட எண்ணை டயல் செய்து தொலைபேசியை விஐபியிடம் கொடுக்க வேண்டும், தாங்களே பேச முயற்சிக்கக் கூடாது. இல்லையெனில், இதுபோன்ற பிரச்சினைகள் எழும்.