இலங்கை தேசிய வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு.

இலங்கை தேசிய வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

யாழ் மண்ணின் பெருமைக்குரிய வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்கள் இலங்கைக்காக 5 ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் (2009, 2012, 2014, 2018 மற்றும் 2022) போட்டிகளிலும், 4 உலக கிண்ண (2011, 2015, 2019 மற்றும் 2023) போட்டிகளிலும், பல சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அதேவேளை ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணித்தலைவியாகவும் செயற்பட்டுள்ளார்.
2011 Netball World Cup போட்டிகளில் World Best Shooter Award, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் Asian Best Shooting Award உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர், இலங்கை சார்பில் 100 க்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே வீராங்கனையாக திகழ்கின்றார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து சர்வதேச வலைப்பந்தாட்ட Icon ஆக உயர்ந்து எம்மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தந்து 45 வயது வரை உற்சாகத்தோடு விளையாடி வீரமங்கை : எங்கள் பெருமை சகோதரி தர்ஜினி சிவலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.