முதல் டி20 போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.

நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் சைபர்ட் 55 ரன்கள் எடுத்தார். கோல் மெக்கன்சி 31 ரன்னும், நீஷம் 25 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. விக்கெட் கீப்பர் அயனாஷ் ஷர்மா ஓரளவு போராடி 60 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், யு.ஏ.இ. அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனல் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 5 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.