நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர்

சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம் தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க பெங்களூருவில் பொதுமக்கள் பெருந்திரளாக குவிந்திருந்தனர். மேளதாளங்கள் முழுங்கியும், நடனமாடியும் அவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கைகளில் தேசியக்கொடியை ஏந்திய அவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி கையசைத்து தனது ஆதரவை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.