டிக்- டாக் – முந்தியது ஆரக்கிள்

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் உட்பட 58 சீனச் செயலிகளை இந்தியா கடந்த ஜுன் மாதம் தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, டிக் டாக்கின் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கப் பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கெடு விதித்தது. இதனால் சீன நிறுவனம் பைட் டான்ஸ் நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன்  பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இவ்வாறான சூழ்நிலையில்,  ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க, பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், மைக்ரோசாப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே ஆன போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது. இந்த விற்பனையில்  ஒட்டு மொத்த விற்பனையா, பங்குகள் பரிமாற்றம் போன்ற விஷயங்களில் போதுமான தரவுகள் பற்றி தெளிவான நிலை எட்டபடவில்லை என்றே தெரிகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் “எங்களின்  தேசிய நலன் மற்றும் பாதுகாப்பைப் பேணும் அதே நேரத்தில் டிக் டாக் பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். உயர்தரப் பாதுகாப்பு, தனியுரிமை, இணையப் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ளுதல் ஆகிய விஷயங்களில் உச்சபட்ச தரத்தைப் பேண வேண்டும் என்று,  நாங்கள் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தோம். இதை எங்களது ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்’ என்று தெரிவித்துள்ளது,

Leave A Reply

Your email address will not be published.