ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா 41 ரன்னும், அசலங்கா 36 ரன்னும், துனித் வெல்லேலகே 33 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட் வீழ்த்தினார்

அந்த அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்கள் விளாசினார். ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்டும், துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.