வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது வருத்தம் அளிக்கிறது – ஆப்கானிஸ்தான் கேப்டன்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில், தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷகிடி , வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் நன்றாகப் போராடினோம், 100 சதவீதம் கொடுத்தோம். நாங்கள் விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதம் குறித்து அணிக்கு பெருமை. கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டி வடிவத்திலும் நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன்.

இன்னும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. நாங்கள் உலகக் கோப்பைக்கு மிக அருகில் இருக்கிறோம், இங்கே நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களுக்கு ஆதரவாக உள்ள ரசிகர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.