பிரித்தானிய ஏரியில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிவிட்டு உயிர் தியாகம் செய்த யாழ்.இளைஞன்

வேல்ஸில் உள்ள பிரேகன் பீகன்ஸ் ஏரியில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுச் சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே ஏரியில் மூழ்கி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்தார்.

நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு சிறுவர்கள் இருவரையும் மோகன் முருகானந்தராஜா என்ற 27 வயதுடைய இளைஞன் Ystradfellte இல் Sgwd Y Pannwr இல் தண்ணீரில் குதித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் இறுதியில் அவர் ஏஅதே ரியில் மூழ்கிய போது இறந்துள்ளார்.

போலீசார், விமான ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மோகனை காப்பாற்ற முயன்றாலும் , அவரை கண்டு பிடிக்க முடியாது போயுள்ளது.

பின்னர், ஏரிக்குள் சிறப்பு கேமரா ஒன்றை அனுப்பியே, எரி சேற்றில் இருந்து மோகனது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மோகனின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக GoFundMe எனும் சமூக ஊடகப் பக்கத்தின் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிதிக்கு இதுவரை இருபதாயிரம் பிரித்தானிய பவுண்டுகளுக்கு மேல் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dyfed Powys காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பேசும் போது : “வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் Sgwd Y Pannwr நீர்வீழ்ச்சி, Ystradfellte க்குள் குதித்த ஒரு நபர் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற தண்ணீருக்குள் சென்று வெளியே வரவில்லை.

“பொலிஸ், தீயணைப்பு சேவை, மலை மீட்பு, HART மற்றும் UK விமான மீட்புக் குழு மற்றும் வேல்ஸ் ஏர் ஆம்புலன்ஸ் ஆகிய இரண்டும் தங்கள் விமானங்களை அருகில் தரையிறக்கி தேடல்களை ஆரம்பித்தது.

“இரவு 7 மணிக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் நீருக்கடியில் கேமரா மூலம் 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜாவின் சடலத்தை தண்ணீரில் கண்டுபிடித்தனர்.

“துரதிர்ஷ்டவசமாக, தளத்தில் நிலைமைகள் காரணமாக, அன்று மாலைவரை அவரை மீட்க முடியவில்லை, மறுநாள் காலையில் சிறப்பு டைவர்ஸ் கொண்டு வரப்பட்டனர்.

“அவரது குடும்பம் சிறப்பு அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகிறது.”
நிதி சேகரிப்பில் வெளியிடப்பட்ட மோகனின் பேட்மிண்டன் கிளப்பின் அஞ்சலி குறிப்பில் : “எங்கள் அன்புக்குரிய மோகனின் மறைவை நாங்கள் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்.

“அவர் பலரின் வாழ்க்கையைத் தொட்டார் மற்றும் அவரது முடிவில்லாத புன்னகையால் அவரை அறிந்த அனைவருக்கும் அரவணைப்பையும் அன்பையும் கொண்டு வந்தார்.

“இந்த சவாலான நேரத்தில் உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் இரக்கத்திற்கு நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளது.

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை சிலோன் மிரர் தெரிவித்துக் கொள்கிறது

Leave A Reply

Your email address will not be published.