‘காவாலா’ பாடல் வீடியோ வெளியானது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒகஸ்ட் 10-ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த மிகப்பெரிய ஹிட் அடித்த ‘காவாலா’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.