என்னை கைது செய்யாததால் தான் IPS அதிகாரிகளுக்கு இந்த முடிவு: அண்ணாமலை

முற்றுகை போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததால் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் நேற்று கொடைக்கானலில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,”தமிழக முதலமைச்சர் ரூ.30,000 கோடி சமாபதித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஊழலுக்காக, கமிஷனுக்காக கடன் வாங்கும் அரசாக திமுக உள்ளது.

தமிழக அமைச்சர்களும், திமுகவினரும் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து பயப்படுகின்றனர். அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட என்னை, கைது செய்யாததால் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” எனக் குற்றம் சாட்டினார்.

சனாதனம்
மேலும் பேசிய அண்ணாமலை, “சனாதனம் என்பது குறித்து சிலர் குழப்பத்தில் உள்ளனர். சனாதனம் என்பது மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதும், அனைவரையும் அரவணைத்து செல்வது ஆகும்.

பாஜகவில், விவசாயி, சாதாரண குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர். ஆனால், திமுகவில் அப்படி இல்லை” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.