முகேஷ் அம்பானி இல்ல விநாயகர் சதூர்த்தி விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதூர்த்தி விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ் சினிமா பிரபலங்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன், அட்லீ, பிரியா, ராஷ்மிகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விநாயகர் சதூர்த்தியையொட்டி பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள ஆன்டிலா இல்லத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசியல், தொழில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ள இயக்குனர் அட்லீ, பிரியா அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்ற தமிழ் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டார்.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, சாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ஷாரூக்கான் அவரது மனைவி, குழந்தைகள், சல்மான்கான், ஆலியாபட், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், கியாரா அத்வானி, சித்தார் மல்கோத்ரா, ஜான் ஆபிரஹாம், சுனில் ஷெட்டி, சாரா அலிகான், மாதுரி தீட்சித், ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.