மலேசியாவில் 3 இலங்கையர்கள் கொன்ற, 2 இலங்கையர்களை தேடி போலீசார் வலை வீச்சு

நேற்றிரவு முதல் நாள் (22) மலேசியா, செந்தூல், லோவர் கோவில் கிராமத்தில் பேர்ஹென்டியன் தெருவில் உள்ள வீடொன்றில், இலங்கையர்கள் மூவரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரைத் தேடும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​இரண்டு சந்தேக நபர்களினது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் ஊடகங்களிடம் கூறுகையில், கொலைக்கு முன், சந்தேக நபர்கள் இருவரும் வீட்டின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை தம்பதியினரது வீட்டில், கைகள் கட்டப்பட்டு வெற்று பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களை குவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வளாகத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்த வாடகைதாரர்கள், மூன்றாவதாக கொலை செய்யப்பட்டவர் , பலியான தம்பதியரின் 20 வயது மகனாகும். உயிரிழந்த மூன்று பேரின் வயது 20 முதல் 40 வயது வரை இருக்கும்.

நேற்று (23) செந்தூல் மாவட்ட பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் மா அதிபர், “வாடகைக்காக இருந்த இலங்கையர்களது வீட்டில் இருந்து சண்டையிடுவது போன்ற அலறல் சத்தம் கேட்டதால் , அயலவர்கள் காவல்துறைக்கு புகார் அறிவித்துள்ளனர்.

“இந்த 40 வயதான இலங்கைத் தம்பதியினருக்கும் அவர்களது மகனுக்கும் இந்த சந்தேக நபர்களை ஆறு மாதங்களாகத் தெரியும் எனவும்… அவர்கள் கிளாங்கிலிருந்து வந்தவர்கள் எனவும் , இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக அவர்களது வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன…”

“சந்தேக நபர்கள் , இந்த கொலைக்கு திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொலைக்கான பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலைகள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.