இராஜாங்க அமைச்சர் டி.வி. சானகவின் மாமனாரான கோடீஸ்வர வர்த்தகர் சுட்டுக்கொலை

நேற்று (23ஆம் திகதி) இரவு இரவு 07.00 மணிக்கு, காலி டிக்சன் சந்தியில் வைத்து மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானகவின், கோடீஸ்வர ஜவுளி வர்த்தகரான சானக்கவின் மாமனார் லலித் வசந்த மெண்டிஸ் (60) , இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் உள்ள மிகப் பெரிய ஆடைக் கடையின் உரிமையாளரான அவர், தனது கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட லலித் வசந்த மெண்டிஸ் மீது , T56 துப்பாக்கியினால் சுடப்பட்டதாகவும், 15ற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் அவரது உடலுக்குள் புகுந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரைத் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், சாரதி இருக்கையில் இருந்த தொழிலதிபர், வாகனத்தினுள்ளேயே உயிரிழந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.