மூன்று நிறத்திற்கு தடை..விநோத முறையை கடைப்பிடிக்கும் கோவில்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகாவூர், மசாலா பொருட்களுக்கும், இனிப்புகளுக்கும், கனிம வளங்களுக்கும் புகழ்பெற்ற ஊராகும். இதுதவிர இவ்வூர் பிரபல ஆன்மீக தளமாகவும் விளங்குகிறது. நாட்டுப்புற தெய்வங்களுக்கான கோயில்கள் மற்றும் சூஃபி தர்காக்கள் இங்கு நிறையவே உள்ளன. அதில் ஹனுமாஞ்சி மற்றும் கனேஷ்ஜி கோயில்கள் உள்ளூர் மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது.

1730-ம் ஆண்டு ராஜா பக்தாவார் சிங், நாகாவூரில் குளம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்காக பணியாளர்கள் பலர் குளம் தோண்டிக் கொண்டிருக்கும் போது, அங்கு இரண்டு சிலைகள் கிடைத்துள்ளது. ஒன்று, விநாயகருடையது, இன்னொன்று ஹனுமானுடையது.

குளம் தோண்டும் போது சிலை கிடைத்ததால், கடவுளே நேரில் இறங்கி வந்துள்ளார் என நினைத்த அவ்வூர் மக்கள், குளத்தின் கரையிலேயே, அதாவது சிலை கிடைத்த அப்பகுதியிலே அந்த தெய்வங்களுக்கு கோயில் அமைத்து, இன்றும் பயபக்தியோடு மக்கள் வணங்கி வருகிறார்கள். முதலில் சிலையை கண்டுபிடித்த போது, தண்ணீருக்குள் இருந்து இந்த சிலையை யாராலும் அகற்ற முடியவில்லையாம். பின்னர் பூஜை செய்து, மந்திர சாஸ்திரங்கள் ஓதிய பிறகே, குளத்திலிருந்து இந்த சிலையை தூக்கி கரையில் வைத்துள்ளார்கள். இக்கோயிலின் சிறப்பம்சமாக இதைக் கூறுகிறார் அங்குள்ள பூசாரி.

இங்குள்ள நவநிர்மான் கோயிலில் 11 முஹி ஹனுமானின் சிலை மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹனுமான், ராமர் பெருமான், பிரிதிவிமாதா, சூரிய கடவுள், நரசிம்மா, பரசுராம், வைரஹா அவதாரம், சிவ பெருமான், விநாயகர், குருத் மற்றும் சேஷங் ஆகிய கடவுளின் வடிவத்தில் இந்தச் சிலையில் ஹனுமானின் 11 அவதாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் மற்றும் ஹனுமான் கோயிலோடு சேர்த்து சாச்சியா மாதா கோயிலும் இங்குள்ளது. இக்கோயிலின் உள்ளே நீலம், பச்சை மற்றும் கருப்பு நிற உடை அணிந்த யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. கேட்க கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது அல்லவா? ஆனால் ஏன் இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளாரக்ள் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

இக்கோயிலில் வீற்றிருக்கும் ஹனுமானை மக்கள் மிகவும் பயபக்தியோடு வணங்கிச் செல்கிறார்கள். நல்ல மனதோடு இங்குள்ள கடவுளை வணங்கினால், மனதில் நினைத்த காரியம் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என இக்கோயிலின் பூசாரி கூறுகிறார். இதைத்தவிர மகேஸ்வரி சமூகத்திற்கு பாத்தியப்பட்ட தேரேசியா மாதா மந்திர் என்ற பிரபலமான கோயிலும் நாகாவூரில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.