யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு!

காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாககே கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நெழுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனைப் பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என்று பெண் வீட்டாரிடமும் தந்தையார் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்த பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.

இதனால் தன்னைத் திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்குத் தொலைபேசியூடாகத் தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று மாலை தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.