நாட்டை உலுக்கிய கொடூரம்; 19 பேர் கொலை – தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை!

நிதாரி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், நொய்டாவுக்கு அருகே உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மொனிந்தர் சிங் பாந்தர். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர் சுரீந்தர் கோலி.

கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் உதவியாளர் கோலி வெளியில் சென்று குழந்தை மற்றும் பெண்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து அவர்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்பு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வடிகால் பகுதியில் இருந்து காணாமல் போன குழந்தையின் உடல் பாகங்கள், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட மொனிந்தர், கோலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், தனது முதலாளியின் வீட்டில் பல குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் அளித்து கொலை செய்து உறவு கொண்டு, உடலுறுப்புகளை வெட்டி சாப்பிட்டதை சுரீந்தர் கோலி ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தார்.

அதனையடுத்து, இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் மொனிந்தர், கோலி ஆகிய இருவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.