நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி.

உலகக் கோப்பை 15ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. தர்மசாலாவில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. துவக்கத்தில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.

முதலில் களமிங்கிய நெதர்லாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். இதனால், நெதர்லாந்து அணி ஒரு கட்டத்தில் 140/7 என படுசோமாக சொதப்பியது. இதனால், அந்த அணி 175 ரன்களை தொடுவதே கஷ்டம் எனக் கருதப்பட்ட நிலையில், 7ஆவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் எட்வர்ட்ஸ் தொடர்ந்து காட்டடி அடித்து, 69 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 78 ரன்களை குவித்து அசத்தினார். இறுதிக் கட்டத்தில் வன் டீர் மெர்வி 29 (19), ஆரியன் துட் 23 (9) இருவரும் அதிரடி காட்டியதால், நெதர்லாந்து அணி எதிர்பார்க்காத வகையில் 43 ஓவர்களில் 245/8 ரன்களை எடுத்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் 43 (52) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், தென்னாப்பிரிக்க அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், நெதர்லாந்து அணிக்கு விளையாட சென்ற 38 வயது வீரர் வன் டிர் மெர்வி தொடர்ந்து அசத்தலாக பந்துவீசி கேப்டன் பவுமா 16 (31), வன் டிர் துஷன் 4 (7) விக்கெட்களை காலி செய்து அசத்தினார்.

இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 33.1 ஓவர்கள் முடிவில் 147/8 என படுமோசமாக சொதப்பியது. அடுத்து, கேசவ் மகாராஜ் மற்றும் ரபாடா ஆகியோர் களத்தில் இருந்தார்கள். அப்போது, ரபாடா 9 (6) சிக்ஸர் அடித்துவிட்டு ஆட்டமிழந்தார். கேசவ் மகாராஜ் 40 (37) போராடியும் பலனில்லை. தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207/10 ரன்களை சேர்த்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Leave A Reply

Your email address will not be published.