இமானால் சிக்கி தவிக்கும் சிவகார்திகேயன்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/10/iman.jpeg)
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.
அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது. சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தவர் டி.இமான். இவர் அண்மையில் சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன் என பேட்டி கொடுத்த நிலையில் குறித்த விடயம் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றது.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க இன்னொரு பிரச்சனை ஒன்று வந்து இருக்கிறது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அந்த சமயத்தில் வேறு எந்த படமும் வராமல் இருப்பதால் அயலான் நல்ல கலெக்ஷனை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அயலான் படம் வெளியாக இருக்கும் தினத்தில் விக்ரமின் தங்கலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால்சலாம், பாலாவின் வணங்கான் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இதனால் அயலான் படத்திற்கு கலெக்ஷனில் பாதிப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.