அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும்! – கட்சியின் விசேட மாநாட்டில் உறுதி.

2024 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ‘ஸ்மார்ட்’ தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவரை உலகம் ஏற்கின்றது. தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது. எனவே, நாட்டில் எல்லாத் துறைகளும் நவீனமயப்படுத்தப்படும். அந்தவகையில் எமது நாடு ‘ஸ்மார்ட்’ நாடாக மாறும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.