என்னுடைய பிரதமர் வேட்பாளர் இவர்தான் – சீமான் அதிரடி

தனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என சீமான் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுகவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம், கூட்டணிக்கு அழைப்பார்கள். இன்னும் நாள் உள்ளது பிறகு தான் பேசவேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக மன்மோகன் சிங் ஆட்சியில் கூட்டணி இருந்தபோது ஏன் சுங்க சாவடிகளை அகற்றவில்லை, திமுக தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, சி ஐ ஏ, என் ஐ ஏ, போன்றவற்றை கொண்டு வந்தது. தற்போது திமுக புனிதரை போல் செயல்படுகிறது என்று பதிலளித்தார்.

மேலும் அவர் பேசுகையிகல், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனது கட்சியில் பிரதமர் வேட்பளார் இல்லையா என கேட்கிறார்கள் எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.